Saturday, April 30, 2011

மன்னம்பிட்டி ஆற்றில் வீழ்ந்து பலியான 6 பேரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு

மன்னம்பிட்டி ஆற்றில் நேற்று(28/04/2011) வான் வீழ்ந்ததில்
பலியானவர்களின் சடலங்கள்பொலநறுவை வைத்தியசாலையிலிருந்து தற்போது இறந்தவர்களின்
சொந்த இடமான மருதமுனைக்கு கொண்டுவரப்படுவததுடன் இன்று சனிக்கிழமை இரவு ஜனாஸா
நல்லடக்கம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மருதமுனையிலிருந்து நேற்று பிற்பகல் 5.30 மணியளவில் ஏழு
பேருடன் கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்று மன்னம்பிட்டிய
பாலத்திலிருந்து ஆற்றுக்குள் வீழ்ந்ததில் வானில் பயணம் செய்த
ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்த அனைவரும் மருதமுனையைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவத்தில் வானை ஓட்டிச் சென்ற உமர்தீன் முகம்மது ஆசிக் எனும்
வைத்தியரொருவர் உயிர்தப்பியுள்ளார்.
சம்பவத்தில் மரணமடைந்த இவருடைய மனைவி சாகிரா, ரித்திக் ரெமி
மற்றும் மனைவியின் தாய் கதிஜா உம்மா உட்பட ஆறு பேரினதும்
சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.வைத்தியரின் மரணமடைந்த மனைவி
சாகிரா ஓர் ஆசிரியையாவார். சம்பவத்தின் போது இவர் 05 மாத
கர்ப்பவதியாக இருந்தார். இந்த சம்பவத்தில் பாத்திமா இம்சா எனும்
12 வயது சிறுமியொருவரும் மரணமாகியுள்ளார்.இதேவேளை, வானில்
பயணித்த மீராசாஹிபு முகம்மது ஜஹான் என்பவரும் அவருடைய
மனைவி சுஆதா என்பவரும் இந்த சம்பவத்தில் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்த சுஹதா ஓர் ஆசிரியையாவார்.

வெளிநாடொன்றிலிருந்து விடுமுறையில் மருதமுனை வந்திருந்த
வைத்தியர் ஆசிக் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் விடுமுறையின்
பின்னர் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு நோக்கி பயணித்த
போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானில் பயணித்த ஏனையோர்
இவர்களை வழியனுப்புவதற்காக சென்றவர்களாவர்.இன்று சனிக்கிழமை
குறித்த வைத்தியரும் அவரின் குடும்பத்தினரும் விமானத்தில் பயணிக்க
ஏற்பாடாகியிருந்தது.
பிரேதங்கள் பொலநறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு
மருதமுனைக்கு கொண்டு வரப்படுகின்றது.




source : Tamilmirror.lk